திருமணம் கடந்த உறவு தொடர்பாக ஒருவரை கொன்று கழிவுநீர் தொட்டிக்குள் வீசியதாக 3 பேர் கைது..!
தென்காசி மாவட்டம் இலத்தூரில் திருமணம் கடந்த உறவு தொடர்பாக ஒருவரை கொன்று கழிவுநீர் தொட்டிக்குள் வீசியதாக பெண்கள் இருவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இலத்தூரில் லட்சுமணன் என்பவரின் வீட்டில் கடந்த ஞாயிறு அன்று கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது எலும்பு கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதைக் கைப்பற்றி தடயவியல் சோதனை நடத்திய போது, அந்த எலும்புக் கூடு அதே பகுதியில் ஏழு மாதங்களுக்கு முன் காணாமல் போன மது என்கிற மாடசாமியுடையது என்பது தெரியவந்தது.
போலீசார் விசாரித்த போது, இறந்த மதுவுக்கும் லட்சுமணனின் வீட்டில் முன்பு வாடகைக்கு குடியிருந்த பிரியா என்ற பேச்சியம்மாளுக்கும் திருமணம் கடந்த உறவு இருந்தது என்று தகவல் கிடைத்தாக கூறப்படுகிறது.
இதன்பேரில் ப்ரியாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், மதுவுக்கும் தனக்கும் திருமணம் கடந்த தொடர்பு இருந்து வந்ததாகவும், குடும்பத்தை விட்டு தன்னுடன் வருமாறு மது கட்டாவலுக்கட்டாயமாக அழைத்ததால் அவரை கொலை செய்து கழிவு நீர் தொட்டியில் வீசியதாகவும் பிரியா வாக்குமூலம் அளித்தாக போலீசார் தெரிவித்தனர். இதன் பேரில் பிரியா மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக அவரது தாய் மாரியம்மாள், கல்லூரியில் முதலாண்டு படிக்கும் 17 வயது தம்பி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
Comments