ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - ரிசர்வ் வங்கி
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் கூறினார்.
மும்பையில் நடைபெற்ற நிதி கொள்கைக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் விவரித்த அவர், நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6 புள்ளி 5 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டு வருவதால் பணப்புழக்கம் அதிகரித்து வருவதாக கூறிய ஆர்.பி.ஐ ஆளுநர், நாட்டின் பணவீக்க விகிதம் கட்டுக்குள் இருப்பதால் ரெப்போ வட்டி விகிதம் 6 புள்ளி 5 சதவீதமாகவே தொடரும் என்றும் தெரிவித்தார்.
Comments