உலக பெருங்கடல் தினத்தையொட்டி சென்னை பெசன்ட் நகர் கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பங்கேற்பு
உலக பெருங்கடல் தினத்தையொட்டி சென்னை பெசன்ட் நகர் கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பங்கேற்றார்.
மக்களின் வாழ்க்கைக்கு பல வழிகளிலும் நன்மை அளிக்கும் கடல் மற்றும் கடல்சார் உயிரினங்களை பாதுகாக்க வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 8-ம் தேதி உலக பெருங்கடல் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இந்நிலையில், சென்னை பெசன்ட் நகர் கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் கிரண் ரிஜிஜு, கடற்கரைகளை சுத்தமாக வைத்திருப்பது நமது கடமை என்றும், இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த அனைவரும் ஒன்று கூடியுள்ளதாகவும் தெரிவித்தார்.
Comments