குடிபோதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்ற நபரை அடித்து கொலை செய்ததாக மறுவாழ்வு மைய உரிமையாளர், மேலாளர் உள்ளிட்ட 4 பேர் கைது..!
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் குடிபோதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்ற நபரை அடித்து கொலை செய்ததாக மறுவாழ்வு மைய உரிமையாளர், மேலாளர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேதாரண்யம் மேலவீதியில் உள்ள மையத்தில், சிகிச்சை பெற்ற கரையங்காட்டை சேர்ந்த முருகேசன், அங்கிருந்து தப்ப முயன்றதாகக் கூறப்படுகிறது.
அவரை மறுவாழ்வு மைய மேலாளர் வேல்முருகன், பணியாளர்கள் ஷியாம்சுந்தர், தீபக்குமார் ஆகியோர் தூணில் கட்டி வைத்து இரும்பு பைப்பால் தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த முருகேசன் உயிரிழந்தார்.
அவரின் மனைவி அளித்த புகாரின் பேரில் 4 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
Comments