மணிப்பூரில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் சென்ற தாய்-மகன் உள்பட 3பேர் ஆம்புலன்சுடன் எரித்துக் கொலை

0 6229

மணிப்பூரில் தாய்- 8வயது மகன் மகன் உள்பட 3 பேர் ஆம்புலன்சுடன் தீயிட்டு கொல்லப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 4 ம்தேதி Kangpokpi மாவட்டத்தில் இருதரப்பினர் துப்பாக்கியால் தாக்கிக் கொண்டதில் 8 வயது சிறுவன் உடலில் குண்டு பாய்ந்தது. அச்சிறுவனை அவனது தாயும், உறவினர் ஒருவரும் ஆம்புலன்சில் தலைநகர் இம்பாலில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அப்போது Iroisemba என்ற இடத்தில் 2000 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து ஆம்புலன்ஸ் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.  சிறுவனின் தாய் எவ்வளவோ கெஞ்சியும் செவி சாய்க்காமல் வன்முறைக் கும்பல் ஆம்புலன்சுக்கு தீ வைத்ததால்  கொடூரமான முறையில் சிறுவன், அவனது தாய் மற்றும் உறவினர் ஒருவர் என 3 பேர் வன்முறையாளர்களால் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை அடையாளம் கண்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments