சீனாவில் ஒவ்வொரு ஆறுமாதமும் புதிய மாறுபட்ட கோவிட் வைரஸை சந்திக்க நேரிடும்... நிபுணர்கள் கருத்து
சீனாவில் ஒவ்வொரு ஆறுமாதத்திலும் கோவிட் தாக்கும் என்றும் இதில் பல லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கோவிட் மீதான அனைத்துக் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டதே இதற்கான காரணம் என்று கூறப்படுகிறது. நோய்த்தொற்றின் அலைகள் புதிய மாறுபாடுகள் தோன்றுவதற்கான அபாயத்தைக் கொண்டுள்ளன" என்று சியாட்டிலில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் நிபுணர் அலி மொக்தாட் கூறியுள்ளார்.
சீனாவில் ஜூன் மாத இறுதிக்குள், வாரத்திற்கு 6 கோடியே 50 லட்சம்பேர் பாதிக்கப்படுவார்கள் என சீனாவின் நுரையீரல் சிகிச்சை நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Comments