ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டரை வயது சிறுமி.... 300 அடி ஆழத்தில் சிக்கியிருப்பதால் மீட்கும் முயற்சியில் தாமதம்....!
மத்தியப் பிரதேசத்தின் ஷேஹோர் மாவட்ட கிராமத்தில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் சுமார் 300 அடி ஆழத்தில் சிக்கிய இரண்டரை வயது பெண் குழந்தையை உயிருடன் மீட்க இரவுபகலாக மீட்புக் குழுவினர் போராடி வருகின்றனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை வயலில் விளையாடிக் கொண்டிருந்த போது ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுமியை மீட்கும் நடவடிக்கையில் தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினருடன் ராணுவமும் ஈடுபட்டுள்ளது. முதலில் சிறுமி 30 அல்லது 40 அடி ஆழத்தில் சிக்கியிருப்பதாகக் கூறப்பட்டது.
ஆனால் சிறுமி 300 அடி ஆழத்தில் இருப்பதால் மீட்பு நடவடிக்கைளில் பின்னடைவு ஏற்பட்டது. பாறைகள் மிக்க பகுதி என்பதால் பள்ளம் தோண்டுவதிலும் தாமதம் ஏற்பட்டது.
இதனிடையே அப்பகுதிக்கு வந்த பாஜக தலைவி சாத்வி பிரக்யா சிங், குழந்தையை உயிருடன் மீட்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
Comments