உ.பி.யில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ.வின் கூட்டாளி நீதிமன்ற வளாகத்தில் சுட்டு கொலை
உத்தரபிரதேசத்தில் கொலை வழக்கில் அண்மையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ.வின் கூட்டாளி பட்டப்பகலில் நீதிமன்ற வளாகத்தில் சுட்டுகொல்லப்பட்டார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ அஜய் ராயின் சகோதரர் அவதேஸ் ராய் 1991-இல் கொலை செய்யப்பட்ட வழக்கில் பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ முக்தர் அன்சாரிக்கு லக்னோ நீதிமன்றம் அண்மையில் ஆயுள் தண்டனை விதித்தது.
இந்நிலையில், அன்சாரியின் கூட்டாளியான சஞ்ஜீவ் ஜீவா என்பவர், லக்னோ நீதிமன்றத்தில் வேறொரு வழக்கு தொடர்பாக ஆஜராக வந்தார். அவரை வழக்கறிஞர் உடையில் வந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர் உயிரிழந்தார்.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை போலீசார் மடக்கி பிடித்தனர். இந்த சம்பவத்தில் ஒரு குழந்தை மற்றும் போலீசார் இருவர் மீதும் குண்டு பாய்ந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Comments