அவுரங்கசிப்பை புகழ்ந்து வாஸ்ட்ஆப் ஸ்டேட்டஸ் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு... இந்து அமைப்புகள் நடத்திய பேராட்டத்தின் போது வன்முறை
மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் நடந்த போராட்டம் ஒன்றின் போது வன்முறை வெடித்ததால் போலீசார் தடியடி நடத்தினர்.
முகலாய மன்னர் அவுரங்கசிப் பற்றிய ஆட்சேபகரமான வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸை சிலர் வைத்ததை கண்டிப்பதாகக் கூறி கோலாப்பூரில் இந்து அமைப்பினர் முழு அடைப்பு மற்றும் பேரணி நடத்தினர். அப்போது மூடியிருந்த கடைகள் மீது சிலர் கற்களை வீசியதாக கூறப்படுகிறது. உடனே போலீசார் அவர்களை நோக்கி தடியடி நடத்தினர்.
போலீசாரின் தடியடி காரணமாக அந்த இடம் முழுவதும் போர்க்களம் போல காணப்பட்டது. பேரணியில் பங்கேற்ற பலருக்கு காயம் ஏற்பட்டது.
இந்த விவகாரத்தில் யார் மீது தவறு இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மஹாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷின்டே கூறியுள்ளார். வன்முறை சம்பவங்களை அடுத்து கோலாப்பூரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Comments