நெல்லுக்கான ஆதார விலையை உயர்த்தியது மத்திய அமைச்சரவை

0 2641
நெல்லுக்கான ஆதார விலையை உயர்த்தியது மத்திய அமைச்சரவை

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை 7 சதவீதம் உயர்த்தி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நடப்பு காரீப் பருவத்திற்கான விளைபொருட்களின் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டது பற்றி செய்தியாளர்களிடம் விவரித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், நெல்லுக்கான ஆதார விலை குவிண்டாலுக்கு 143 ரூபாய் அதிகரித்து 2 ஆயிரத்து 183 ரூபாயாக உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

அதிகபட்சமாக பாசிப்பருப்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவின்டாலுக்கு 8 ஆயிரத்து 558 ரூபாயாகவும், கேழ்வரகுக்கான ஆதார விலையை இரு மடங்கு அதிகரித்து குவிண்டால் ரூ.3 ஆயிரத்து 846 ஆகவும் அமைச்சரவை நிர்ணயம் செய்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

பருத்தி, சோயாபீன்ஸ் உள்ளிட்டவற்றுக்கான கொள்முதல் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு லாபகரமான விலையை உறுதி செய்யவும், பயிர் பல்வகைப்படுத்தலை ஊக்குவிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாதவும் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments