குரூப் 4 பணியிடங்களை நிரப்பாததால் அரசுப் பணிகளில் தொய்வு: இ.பி.எஸ்

0 1746

டி.என்.பி.எஸ்.சி தொகுதி 4-க்கான பணியிடங்கள் நிரப்பப்படாததால் அரசின் அனைத்து துறை பணிகளிலும் தொய்வு ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2022ம் ஆண்டு சுமார் 10 ஆயிரம் தொகுதி-4 காலிப்பணியிடங்களுக்காக நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் மாதம் வெளியான போதிலும் இதுவரை கலந்தாய்வு நடைபெறவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி தொகுதி 4-க்கான காலிப்பணியிடங்கள் தற்போது 25 ஆயிரமாக உயர்ந்திருப்பதாக செய்திகள் வருவதாக குறிப்பிட்டுள்ள அவர், 2022-ம் ஆண்டு தொகுதி 4-க்காக நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி தேர்வில் தகுதி பெற்ற தேர்வாளர்களுக்கு கலந்தாய்வை நடத்தி அரசு துறைகளில் காலியாக உள்ள 20 ஆயிரம் பணியிடங்களையாவது உடனடியாக நிரப்பிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

டி.என்.பி.எஸ்.சி தொகுதி -4க்கான பணியிடங்கள் நிரப்பப்படாததால் அரசின் அனைத்து துறைகளின் பணிகளிலும் தொய்வு ஏற்பட்டு மக்கள் அவதிக்கு உள்ளாவதாகவும் அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments