ஜூஸ் கடையில் உணவு பொருட்களை இலவசமாக கேட்டு தகராறில் ஈடுபட்ட 4 பெண் காவலர்கள் பணியிடை நீக்கம்..!

0 1887

ஜூஸ் கடையில் உணவு பொருட்களை இலவசமாக கேட்டு தகராறில் ஈடுபட்டதாக கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

படப்பையில் உள்ள ஜூஸ் கடைக்கு வந்த ஆய்வாளர் விஜயலட்சுமி, தலைமைக் காவலர் ஜெயமாலா மற்றும் இரண்டு பெண் காவலர்கள் பிரெட் ஆம்லெட், ஜூஸ், சாக்லெட் போன்றவற்றை இலவசமாக கேட்டு விற்பனையாளர்களிடம் தகராறு செய்துள்ளனர். மேலும், பொருட்களை தரவில்லை என்றால் கடை உரிமத்தை ரத்து செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.

இதுகுறித்து கடை உரிமையாளர் ஷாஜகான் மணிமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் விசாரணை மேற்கொண்டார். கடையில் இருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில், இரவு பணியில் இருந்த நான்கு பேரும் தகராறில் ஈடுபட்டது உறுதியான நிலையில், பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments