மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரிடம் 5 முக்கிய கோரிக்கைகளை வைத்த மல்யுத்த வீராங்கனைகள்

0 2536

மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரின் அழைப்பை ஏற்று பேச்சுவார்த்தைக்கு சென்ற மல்யுத்த வீராங்கனைகள், அவரிடம் 5 முக்கிய கோரிக்கைகளை வைத்தனர்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக பெண் ஒருவர் பொறுப்பேற்க வேண்டும், பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள மல்யுத்த சங்கத்தின் தற்போதைய தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் யாரும் மல்யுத்தக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கக் கூடாது, மல்யுத்த அமைப்பிற்கு சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடத்தப்பட வேண்டும், டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரம் தொடர்பாக தங்கள் மீது பதிவுசெய்யப்பட்டுள்ள எஃப்.ஐ.ஆரை ரத்து செய்ய வேண்டும், பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்ய வேண்டும் ஆகிய 5 முக்கிய கோரிக்கைகளை வீராங்கனைகள் முன்வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments