216 பயணிகளுடன் சென்ற விமானத்தில் இயந்திர கோளாறு.. மும்பையிலிருந்து ரஷ்யாவிற்கு தனி விமானம் அனுப்பிய ஏர் இந்தியா
இயந்திரக்கோளாறு காரணமாக ரஷ்யாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஏர் இந்தியா விமானத்திற்கு மாற்றாக மற்றொரு விமானம் மும்பையில் இருந்து புறப்பட்டுச் சென்றது.
டெல்லியிலிருந்து 216 பயணிகள் மற்றும் 16 ஊழியர்களுடன் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவிற்கு செவ்வாயன்று புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானத்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ரஷ்யாவின் மகதான் விமான நிலையத்தில் அவரசமாக தரையிறக்கப்பட்டது.
பயணிகளை ஹோட்டலில் தங்க வைத்த விமான நிறுவனம், அவர்களை மீண்டும் பத்திரமாக சான்பிரான்சிஸ்கோ அழைத்துச் செல்வதற்காக மும்பையிலிருந்து உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுடன் கூடிய
தனி விமானத்தை அனுப்பி வைத்துள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
Comments