பிரிட்டன் மண்ணில் உள்ள ரகசிய காவல் நிலையங்களை மூடுமாறு சீனாவுக்கு பிரிட்டன் அரசு கடுமையாக வலியுறுத்தல்!
பிரிட்டன் மண்ணில் உள்ள ரகசிய காவல் நிலையங்களை மூடுமாறு சீனாவுக்கு பிரிட்டன் அரசு கடுமையாக வலியுறுத்தியுள்ளதாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சர் டாம் துகேன்தட் எழுத்துப்பூர்வமாக விளக்கம்அளித்துள்ளார்.
சீனத் தூதரகம் மூலமாக இங்கிலாந்தில் சீனா காவல்நிலையங்களை நடத்துவதை ஏற்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த வடிவிலும் சீனா தனது காவல் நிலையத்தை இயக்கக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே இருந்த அத்தனை நிலையங்களும்மூடப்பட்டு விட்டதாகவும் இங்கிலாந்து சட்டத்திற்குட்பட்டு செயல்படுவோம் என்றும் சீனத்தூதரகம் சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
Comments