ஹைதி நாட்டில் 4.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 4 பேர் பலி
கரீபியன் கடல் நாடான ஹைதியில், கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளில் சிக்கி மக்கள் மீள்வதற்குள் இயற்கை பேரிடராக நேரிட்ட நிலநடுக்கத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அந்த நாட்டின் ஜெரெமீ நகருக்கு அருகே 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளி 9 அலகுகளாகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்க அதிர்வுகளால் வீடுகள் இடிந்து தரைமட்டமானது.
தொடர் கனமழையால் ஆறுகள் நிரம்பி வீடுகளிலும், விளைநிலங்களிலும் வெள்ளநீர் புகுந்த துடன், ஏராளமான வீடுகள் இடிந்து சேதமடைந்தன.
இதனால் அந்த நாட்டில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.வெள்ள பாதிப்புகளில் சிக்கி இதுவரை 42 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
Comments