அரபிக்கடலில் உருவானது பிபர்ஜாய் புயல்.. அடுத்த 6 மணி நேரத்தில் அதி தீவிர சூறாவளிப் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தகவல்!
மத்தியகிழக்கு மற்றும் தென்மேற்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது.
இந்தப் புயலுக்கு வங்கதேசம் பிபர்ஜாய் என்று பெயரிட்டுள்ளது. இன்று காலை 5.30 மணி நிலவரப்படி, கோவாவிலிருந்து 900 கிலோ மீட்டர் மற்றும் தென் மேற்கு மும்பையில் இருந்து ஆயிரத்து 20 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது வடக்கு நோக்கி நகர்ந்து தீவிரப் புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 6 மணி நேரத்தில் கிழக்கு மத்திய அரபிக்கடலில் அதி தீவிர சூறாவளிப் புயலாக உருமாறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
Comments