பழைய வாகனம் விற்க olx ஐ நாடுபவர்களின் கவனத்திற்கு... வீடு தேடிவரும் பிராடுகள்..! வாட்ஸ் அப் குழுவால் சிக்கினர்

0 7505

ஒ.எல்.எக்ஸ் மூலம் இரு சக்கரவாகனங்களை விற்பதற்கு விளம்பரப்படுத்தும் நபர்களிடம் , வாகனங்களை வாங்குவது போல நடித்து ஆர்.சி புக்கை பெற்றுக் கொண்டு பைக்கை திருடிச்செல்லும் கேடி கொள்ளையர்கள் போலீசாரிடம் சிக்கி உள்ளனர். வாட்ஸ் அப் குழுவால் அடையாளம் காணப்பட்ட கொள்ளையர்கள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு.

மதுரை சிந்தாமணி , வாழைத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் இவர் பசுமலை அருகே ஆட்டோ கன்சல்டன்சி நடத்தி வருகிறார் இவரது கடையில் விலை உயர்ந்த டியூக்., ஆர்15., அப்பாச்சி., ஹார்லி டேவிட்சன்., பல்சர் உள்ளிட்ட அதிக திறன் கொண்ட பைக்குகளை செகண்ட் ஹேண்டாக விற்பனை செய்து வருகிறார். இவரது கடைக்கு கடந்த ஜனவரி மாதத்தில் மதுரையைச் சேர்ந்த நபர் ஒருவர் டியூக் பைக்கை ஒரிஜினல் RC புக்குடன் விற்பதற்காக தனது நண்பருடன் மணிகண்டனின் கடைக்கு வந்துள்ளார்.

பைக் கன்சல்டன்சி ஓனர் மணிகண்டன் 1.15 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு பைக்கை பெற்றுள்ளார். அந்த பைக்கை அவர் விற்பதற்காக YouTube., இன்ஸ்டாகிராம் ரீல்ஸ். மற்றும் OLX ஆகியவற்றில் விளம்பரம் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த கோவையை சேர்ந்த அந்த Duke பைக்கின் உண்மையான உரிமையாளர், போலீஸ் உதவியுடன் வந்து தனது பைக்கை மணிகண்டனிடம் இருந்து பெற்று சென்றதாக கூறப்படுகின்றது.

ஏமாற்றப்பட்ட மணிகண்டன் சம்பவம் குறித்து திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும் தனக்குத் தெரிந்த மற்ற டூவீலர் விற்பனை நிலையங்கள் மற்றும் ஆட்டோ கன்சல்டன்சி வாட்ஸ் அப் குரூப்பில் ஏமாற்றி விட்டு சென்ற நபர்களின் புகைப்படங்களை வெளியிட்டு இவர்களைப் பற்றி தகவல் தெரிவிக்கும்படி கூறியிருந்தார்.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அந்த இருவரும் யமஹா ஆர் 15 பைக்கை திருடி வந்து மதுரையில் விற்க முயன்ற போது பைக் கன்சல்டன்சி வாட்ஸ் அப் குழுவில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இருவரையும் கையும் களவுமாக பிடித்த மணிகண்டன், திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

விசாரணையில் இவர்கள் மதுரை கரும்பாலை பகுதியைச் சேர்ந்த முருகேசன் , திருப்புவனம் அங்காடிமங்கலத்தை சேர்ந்த அரிகிருஷ்ணன் என்பதும் பனியன் தொழில்சாலைகளில் வேலை பார்த்து வரும் இவர்கள், பைக் விற்பதற்காக OLX விளம்பரம் செய்யும் நபர்களை தொடர்பு கொண்டு அவர்களிடம் ஒரிஜினல் ஆர்சி புக்கை பெற்றுக் கொண்டு, வாகனத்தை ஓட்டி பார்ப்பதாக கூறி பைக்குகளை திருடி வந்து விற்றது தெரிய வந்தது. இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments