கர்நாடகாவில் 200 யூனிட்டுக்கு மேல் உள்ள மின்கட்டணத்தை உயர்த்தியது காங்கிரஸ் அரசு..!
கர்நாடக அரசு இலவச வரம்பை மீறி பயன்படுத்தப்படும் மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலின் போது, 'கிரஹ ஜோதி' திட்டத்தின் கீழ் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதாக காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்திருந்தது.
இந்நிலையில் ஜூன் மாதம் முதல் மின் கட்டணம் யூனிட்டுக்கு ரூ.2.89 உயர்த்தப்பட்டுள்ளது. 200 யூனிட்டுகளுக்கு மேல் இருந்தால், உயர்த்தப்பட்ட கட்டணத்தை மாநில மக்கள் செலுத்த வேண்டியிருக்கும்.
பில்லிங் சிக்கல்கள் மற்றும் போதிய கால அவகாசம் இல்லாத காரணத்தால் மார்ச் மாதத்தில் செயல்படுத்த முடியவில்லை. ஜூன் மாதம் முதல் இது விதிக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, மின் கட்டணத்தை உயர்த்தி, கர்நாடக மக்களுக்கு, காங்கிரஸ் அரசு துரோகம் இழைத்துள்ளதாக, எதிர்க்கட்சியான, பா.ஜ., கண்டனம் தெரிவித்துள்ளது
Comments