டெல்லியில் 155 கடைகள் மற்றும் நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி..!
டெல்லியில் 155 கடைகள் மற்றும் நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்பட முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அனுமதி அளித்துள்ளார்.
இரவு நேர கடைகள் வர்த்தக நிறுவனங்களுக்கு அனுமதியளித்ததன் மூலம் டெல்லியின் இரவு வாழ்க்கைக்கு வாய்ப்பு கிடைக்கும். ஏற்கனவே அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் 523 கடைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இதன் மூலம் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் நகரின் பொருளாதர வளர்ச்சிக்கு உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Comments