அமெரிக்க விமானத்தில் மதுபோதையில் கத்திக் கூச்சலிட்டு கலாட்டா செய்த இளம்பெண் கைது!

0 2204

அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ்சில் விமானத்தில், மதுபோதையில் கத்தி கூச்சலிட்டு சக பயணிகளிடம் ரகளையில் ஈடுபட்ட இளம் பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.

சம்பவத்தன்று, நியூ ஆர்லியன்ஸிலிருந்து விமானம் புறப்பட்ட சிறிதுநேரத்தில் மது போதையில் இருந்த இளம்பெண், கத்தி கூச்சலிட்டும் கால்களை உயர்த்தி முன்னிருக்கையில் இருந்த பயணியை உதைத்தும் தொந்தரவு செய்தபடி இருந்து உள்ளார்.

விமான ஊழியர்கள் அவரை கட்டுப்படுத்த முயன்றும், முடியாமற்போனது. பாதி தூரம் பறந்த விமானம் மீண்டும் நியூ ஆர்லியன்ஸ் கொண்டு வரப்பட்ட நிலையில், விமானத்திற் உள்ளே வந்த அதிகாரிகள் அவரை இருக்கையில் இருந்து இழுத்துவந்து கைவிலங்கு மாட்டி விமானத்தில் இருந்து வெளியேற்றினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments