கடையம் வனப்பகுதியில் மின்னல் தாக்கியதன் காரணமாக கடும் தீ விபத்து

0 1937

நெல்லை மாவட்டம் கடையம் வனப்பகுதியில் மின்னல் தாக்கியதில் உண்டான காட்டுத் தீயை அணைக்கும் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

ஆம்பூர் பீட் வனப்பகுதியில் மின்னல் தாக்கியதில் தரையில் கிடந்த காய்ந்த சருகுகளில் தீப்பிடித்து வேகமாக பரவியது.

தொடர்ந்து ராமநதி பீட் பகுதியிலும் தீப்பற்றியதால் கடையம் வனச்சரகர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இரவு நேரமாகிவிட்டதாலும், தீப்பிடித்த பகுதி மிக உயரத்தில் இருப்பதாலும் தீயை உடனடியாகக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments