13 ஆண்டுகளாக கண்டெய்னரில் கேட்பாரற்றுக் கிடக்கும் 3 டெஸ்லா கார்களை 2 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் விட முடிவு!
13 ஆண்டுகளாக சீன துறைமுகத்தில், கண்டெய்னர்களில் கேட்பாரற்றுக் கிடக்கும் மூன்று புத்தம் புதிய டெஸ்லா கார்களை ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
2010ஆம் வருட தயாரிப்பான டெஸ்லா ரோட்ஸ்டர் கார்கள், சீனாவின் குயிங்டாவோ துறைமுகத்தில் கண்டெய்னரில் கண்டுபிடிக்கப்பட்டன.
கார்களை ஆர்டர் செய்த சீன நபர் அந்த கார்களை எடுக்காமலேயே விட்டுவிட்டார். டெஸ்லா ஸ்பெஷலிஸ்ட் க்ரூபர் மோட்டார் நிறுவனம் நடத்தும் ஏலத்தில், மூன்று கார்களுக்கும் 2 மில்லியன் டாலர்கள் ஏலத் தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதன் விற்பனை முடிந்தால், ஒவ்வொரு காரின் மதிப்பும் 6 லட்சத்து 66 ஆயிரத்து 666 டாலராக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
Comments