அம்பத்தூரில் உள்ள ஆவின் பால் பண்ணையில் சிறுவர்களை வேலைக்கு வைத்ததாக சர்ச்சை....!

0 3884

சென்னையை அடுத்த அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் சட்டத்துக்கு புறம்பாக சிறுவர்களை பணியில் அமர்த்தியதாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

ஆவினில் கோடை காலத்தில் ஐஸ் கிரீம் விற்பனையை பெருக்குவதற்காக தற்காலிகமாக ஒப்பந்த தொழிலாளர்களை நியமிப்பது வழக்கம்.

இந்த ஒப்பந்தத்தை பெற்றுள்ள கோவிந்தராஜன் என்பவர் ஆவடி, பட்டாபிராம் பகுதிகளை சேர்ந்த சிறுவர்களை ஆவின் பால்பண்ணையில் வேலைக்கு வைத்ததாக கூறப்படுகிறது.

அந்தச் சிறுவர்கள் தங்களுக்கு இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என கூறி அம்பத்தூர் பால் பண்ணை நுழைவுவாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments