ரசீது புத்தகங்கள் வாங்கியதில் ரூ.1.31 கோடி முறைகேடு செய்ததாக புகார்.. ஐ.ஏ.எஸ். அதிகாரி மலர்விழியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
முறைகேடு புகாரில் தருமபுரி மாவட்ட முன்னாள் ஆட்சியரும் தற்போதைய சென்னை அறிவியல் நகரின் துணை தலைவருமான மலர்விழி ஐ.ஏ.எஸ். தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
2019ஆம் ஆண்டில் ஆட்சியராக பணியாற்றிய காலத்தில் தொழில்வரி ரசீது புத்தகங்கள் மற்றும் இதர கட்டண புத்தகங்களை ஒரு லட்சத்து 25 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் இரு தனியார் நிறுவனங்களிடம் மலர்விழி கொள்முதல் செய்துள்ளார்.
ஒப்பந்தப்புள்ளிகள் கோராமல் அதிகபட்ச விலைக்கு அப்புத்தகங்களை கொள்முதல் செய்யப்பட்டதாகவும், தனியார் நிறுவனங்களுடன் இணைந்து சுமார் ஒரு கோடியே 31 லட்சம் ரூபாய் பணத்தை மலர்விழி கையாடல் செய்ததாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
இது தொடர்பாக சென்னையில் மலர்விழியின் வீடுகள் உள்ளிட்ட 5 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும், தருமபுரி பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் என்பவரது வீட்டிலும், புதுக்கோட்டையில் 3 இடங்களிலும், விழுப்புரத்தில் ஒரு இடத்திலும் சோதனை நடைபெறுகிறது.
Comments