சென்னை மதுரவாயலில் ரவுடியை ஓட ஒட விரட்டி வெட்டிக் கொன்ற 5 பேர் கைது!

0 2037

ஊருக்குள் யார் பெரிய ரவுடி என்ற மோதலில் சென்னையை அடுத்த மதுரவாயலில் ரவுடி ஒருவரை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொன்றதாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

கொலையான நெற்குன்றம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் மீது கொலை, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.

கந்தசாமி நகர் பகுதியில் நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ராஜேஷை, மர்ம கும்பல் ஒன்று வழிமறித்து சரமாரியாக வெட்டியது.

அங்கிருந்து தப்பி ஓட முயன்ற போதிலும் விடாமல் விரட்டிச் சென்று வெட்டியதில் ராஜேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், நெற்குன்றம் பகுதியில் யார் பெரிய ரவுடி என்பது தொடர்பாக பன்னி சுரேஷ் என்பவருக்கும் ராஜேஷுக்கும் இடையே போட்டி இருந்து வந்ததாகவும், இது தொடர்பான மோதலில் கடந்த ஞாயிறு அன்று பன்னி சுரேஷை ராஜேஷ் அடித்ததாகவும் போலீசாருக்கு தெரியவந்தது.

இதில் ஆத்திரமடைந்த பன்னி சுரேஷ் தனது ஆட்களுடன் சேர்ந்து ராஜேஷை வெட்டியதாக தெரிவித்த போலீசார், பன்னி சுரேஷ் உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்ததுடன், தலைமறைவான மேலும் சிலரை தேடி வருவதாக கூறினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments