கன்னியாகுமரி வனப்பகுதியில் விடப்பட்ட அரிசிகொம்பன் யானை..!

0 10109

கம்பம் வனப்பகுதியில் பிடித்து வரப்பட்ட அரிசிகொம்பன் யானை கன்னியாகுமரி வனப்பகுதியில் விடப்பட்டது.

சாலை மார்க்கமாக முண்டந்துறை புலிகள் காப்பக பகுதிக்கு திங்களன்று மாலையில் கொண்டு செல்லப்பட்ட அரிசி கொம்பன், மலைப்பாதை வழியாக கன்னியாகுமரி மாவட்டம் முத்துக்குழி வயல் என்ற வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.

2 நாட்கள் சிகிச்சை அளித்து விட்டு பின்னர் யானையை காட்டில் விட வனத்துறையினர் முடிவு செய்திருந்தனர்.

ஆனால் அதற்கான சாத்திய கூறுகள் குறைவாக இருந்ததால் முதலுதவி சிகிச்சை மட்டும் அளித்து அதிகாலை நேரத்தில் வனப்பகுதியில் விட்டு விட்டதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments