ஹைதி நாட்டில் வெள்ள பாதிப்புகளில் சிக்கி 42 பேர் உயிரிழப்பு
ஹைதி நாட்டில் கொட்டித்தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளில் சிக்கி 42 பேர் உயிரிழந்தனர். 12 பேர் மாயமானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை முதல் பெய்த தொடர் கனமழையால் லியோகன் நகரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆறுகள் நிரம்பி வீடுகளிலும் விளைநிலங்களிலும் தண்ணீர் புகுந்ததோடு, நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து சேதமடைந்தன.
மழையால் சில பகுதிகளில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. மழை பெய்த பகுதிகளில் சுமார் 37 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 13 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளதாகவும் ஐ.நா தெரிவித்துள்ளது
Comments