சென்னை அண்ணாசாலையில் ஆக்கிரமித்து இருந்த அரசு நிலம் மீட்பு..!

0 4979

சென்னை அண்ணா சாலை அண்ணா மேம்பாலம் அருகே அரசுக்கு சொந்தமான ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை ஆக்கிரமித்து இருந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரிடமிருந்து வருவாய்த்துறையினர் மீட்டனர்.

இதையடுத்து அந்த இடத்திற்கு தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது.இந்த  நிலத்தை மீட்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அரசு நிலத்தை மீட்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் உத்தரவிட்டது.

இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவு மற்றும் தோட்டக்கலை துறையின் கடிதம் ஆகியவற்றின் அடிப்படையில் வருவாய் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

நில நிர்வாகத்துறை ஆணையர் உத்தரவின் அடிப்படையில், சென்னை தெற்கு வருவாய்த் கோட்டாட்சியர், மயிலாப்பூர் வட்டாட்சியர் ஆகியோர் நேற்று இந்த நிலத்துக்கு சீல் வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments