போலி பில் மூலம் வாடிக்கையாளர்களிடம் பணம் வசூலிப்பு.. நிதி நிறுவன வசூல் மேலாளர் மீது நடவடிக்கை கோரி போராட்டம்

0 2851

கட்டிய பணத்திற்கு போலியான ரசீதுகள் வழங்கப்பட்டதாகக் கூறி மேட்டுப்பாளையம் தனியார் பைனான்ஸ் அலுவலகத்தில் பணம் செலுத்தியவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேட்டுப்பாளையத்தில் கோவை சாலையில் தனியார் பைனான்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.இங்கு தவணை பணம் செலுத்தியவர்களுக்கு மீண்டும் பணம் செலுத்துமாறு வந்த போனை தொடர்ந்து அந்த அலுவலகம் சென்று முறையிட்டனர். 

அவர்கள் பணம் கட்டியதற்கான பில்லை காட்டியபோது, அது போலியானது என தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து பணம் வசூலித்த நிறுவன ஊழியர் அபிசேக் என்பவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் போலி பில் மூலம் நிறுவனத்தின் பணத்தை கையாடல் செய்து இருப்பது தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments