மதுரவாயலில் ரவுடி ஒருவர் ஓட ஓட விரட்டிக் கொலை.. 4 பேர் கொண்ட கொலையாளிகளுக்கு போலீசார் வலைவீச்சு!
சென்னை அடுத்துள்ள மதுரவாயலில் ரவுடி ஒருவர் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரவாயல் அடுத்த நெற்குன்றம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் கந்தசாமி நகர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ராஜேசை எதிரே இரண்டு மோட்டார் சைக்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து தாக்குதல் நடத்தியது.
அப்போது தப்பி ஓட முயன்ற ராஜேசை துரத்தி சென்று மர்ம கும்பல் வெட்டி கொலை செய்து விட்டு தப்பியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்த ராஜேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Comments