"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
கர்நாடகத்தில் ஜூன் 11 முதல் பேருந்துகளில் பெண்களுக்கு நிபந்தனைகளுடன் இலவசப் பயணம்
கர்நாடகத்தில் மகளிருக்கு இலவசப் பேருந்து திட்டத்திற்கு ஆணையை அரசு பிறப்பித்துள்ளது.
இதற்கான சக்தி ஸ்மார்ட் அட்டையை மூன்று மாதத்திற்குள் அரசு சேவா சிந்து இணையத்தில் விண்ணப்பித்துப் பெற வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ஜூன் 11 முதல் இத்திட்டம் அமலுக்கு வருகிறது.
காங்கிரஸ் அரசு தேர்தல் பிரச்சாரத்தில் அளித்த 5 வாக்குறுதிகளில் ஒன்று மகளிருக்கு இலவசப் பேருந்து பயணம் என்பதாகும்.
பெண்களுடன் மூன்றாம் பாலினத்தவரும் இந்தப் பயன்பாட்டை பெறலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது.கே.எஸ்.ஆர்.டி.சி , பெங்களூர் மெட்ரோபாலிட்டன் போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட பேருந்துகளில் மகளிருக்கு இந்த இலவச சேவை வழங்கப்படும்.
Comments