வளர்ந்த நாடுகள் சிலவற்றின் தவறான கொள்கைகளுக்கான விலையை வளரும் நாடுகள் கொடுத்து வருகிறது - பிரதமர் மோடி!
வளர்ந்த நாடுகள் சிலவற்றின் தவறான கொள்கைகளுக்கான விலையை வளரும் நாடுகள் கொடுத்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு டெல்லியில் அவர் வெளியிட்ட காணொளிச் செய்தியில், பெரிய மற்றும் முன்னேற்றம் அடைந்த சில நாடுகள் சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் தராமல், தங்கள் வளர்ச்சிக்கு மட்டுமே நீண்ட காலமாக முன்னுரிமை கொடுத்து வந்ததாக தெரிவித்தார்.
அத்தகைய நாடுகளின் தவறுகளை பல தசாப்தங்களாக யாருமே தட்டிக் கேட்கவில்லை என்று குறிப்பிட்ட பிரதமர், தற்போது அத்தகைய நாடுகளிடம் இந்தியா நியாயம் கேட்டிருப்பதாக தெரிவித்தார்.
இந்தியாவின் பல ஆயிரம் ஆண்டு பழமையான கலாசாரத்தில் வளர்ச்சிக்கு தரும் அதே முக்கியத்துவம் சுற்றுச்சூழலுக்கும் தரப்பட்டிருப்பதாகவும், தற்போதும் கூட கட்டமைப்புகளில் முதலீடு செய்து வரும் அதே வேளையில் சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் தமது செய்தியில் கூறினார்.
Comments