தமிழக பெண்ணிற்கு இந்து முறைப்படி தாலி கட்டிய ஜெர்மன் இளைஞர்

0 4322

தமிழக பெண்ணை ஜெர்மன் இளைஞர் இந்து முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்துக் கொண்டார்.

சென்னையை சேர்ந்த ஹர்ஷிதா, படிப்பிற்காக ஜெர்மன் சென்ற போது டேவிட் ஹான்சயில்ட் என்பவரை காதலித்துள்ளார்.

இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொள்ள முடிவெடுத்த நிலையில், சனிக்கிழமையன்று சென்னையில் ஜெர்மன் நாட்டு முறைப்படி திருமணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, வேத மந்திரங்கள் முழங்க ஹர்தாவிற்கு, டேவிட் ஹான்சயில்ட் இன்று தாலி கட்டினார்.

திருமண விழாவில், மணமகனின் உறவினர்கள் புடவை, வேஷ்டியில் திருமண சடங்குகளில் உற்சாகமாக பங்கேற்றனர். திருமணத்திற்கு வந்திருந்த நண்பர்கள் திருமண பரிசாக அளித்த மண் அடுப்பு, மண்பானை, குடுவை உள்ளிட்ட மண்ணாலான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments