பஞ்சாப் மாநிலம் அட்டாரி-வாகா எல்லையருகில் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் டிரோன்
பஞ்சாப் மாநிலம் அட்டாரியில் வாகா எல்லை அருகே பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய டிரோனை எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.
தொலைத் தொடர்பு தகவலின் அடிப்படையில் பாகிஸ்தானில் இருந்து டிரோன் ஒன்று எல்லைத் தாண்டியதாக தகவல் கிடைத்ததும் உடனடியாக அவர்கள் அந்த டிரோனை சுட்டு வீழ்த்தினர்.
டிரோனில் 3 கிலோ எடை கொண்ட போதைப் பொருட்கள் இருந்ததாகவும் ராணுவத்தினர் தெரிவித்தனர்.
Comments