மீண்டும் தென்பட்டது 100 ஆண்டுகளுக்கு முன் அழிந்து போனதாகக் கருதப்பட்ட அரியவகை பட்டாம்பூச்சி..!

0 3722

இங்கிலாந்தில் 100 ஆண்டுகளுக்கு முன் அழிந்து போனதாகக் கருதப்பட்ட அரியவகை பட்டாம்பூச்சி மீண்டும் பார்வையில் தென்பட்டது.

லண்டனில் தென்கிழக்குப் பகுதியில் முட்டைக்கோஸ் பட்டாம்பூச்சிகள் எனப்படும் இனத்தைச் சேர்ந்த வண்ணத்துப்பூச்சிகள் இரண்டாம் சார்லஸ் மன்னரின் காலத்தில் அரிய வகையாக அறிவிக்கப்பட்டது.

பின்னர் 1925ம் ஆண்டில் இந்தப் பட்டாம்பூச்சி வகைகள் அழிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன் தனித்துவமிக்க முட்டைக்கோஸ் பட்டாம்பூச்சிகள் குறிப்பிட்ட சில இடங்களில் பார்க்கப்பட்டதாக பூச்சியியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 100 ஆண்டுகளுக்குப் பின் அந்த உயிரினங்களைப் பார்ப்பது ஆச்சரியமாக இருந்ததாகவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY