ஓசி-யில் சாம்பார், குடிநீர் பாட்டில் கேட்டு ரகளையில் ஈடுபட்ட ஆக்டிங் டிரைவர்..!
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ஓசியில் சாம்பார் மற்றும் குடிநீர் பாட்டில் கேட்டு ஆக்டிங் டிரைவர் ஒருவர் ரகளையில் ஈடுபடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
பெரியார் நகரில் இயங்கி வரும் தனியார் ஹோட்டல் ஒன்றில் நேற்று ஆக்டிங் டிரைவர் பாலு என்பவர் ஓசியில் சாம்பார் மற்றும் தண்ணீர் பாட்டில் கேட்டு கடைக்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளை தூக்கி சாலையில் போட்டு ரகளையில் ஈடுபட்டார். மேலும் அருகில் இருந்த கட்டையை எடுத்துக் கொண்டு வந்து தாக்கவும் முயன்றதாக கூறப்படுகிறது.
Comments