சூயஸ் கால்வாயில் பழுதாகி நின்ற பிரமாண்ட சரக்குக் கப்பல்..!
எகிப்தின் சூயஸ் கால்வாயில் பிரமாண்ட சரக்குக் கப்பல் பழுதாகி நின்றதால் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மால்டா நாட்டுக் கொடியுடன் சென்ற சீவிகோர் என்ற கப்பல் சூயஸ் கால்வாயில் நுழைந்து 12 கிலோ மீட்டர் தூரத்தில் பழுதாகி நின்றது. இதனால் அந்தக் கப்பலின் பின்னால் வந்து கொண்டிருந்த 8 கப்பல்களும் நிறுத்தப்பட்டன.
இதனையடுத்து 3 இழுவைப் படகுகள் வரவழைக்கப்பட்டு சுமார் 17 கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் சென்று இரட்டைப் பாதையில் நிறுத்தியதாக சூயஸ் கால்வாய் ஆணையத்தின் தலைவர் அட்மிரல் ஒசாமா ரபே தெரிவித்தார். சீவிகோர் கப்பல் பழுதானதால் உலகளாவிய நீர்வழிப் பாதையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
உலக கடல் வர்த்தகத்தில் சுமார் 10 விழுக்காடு இந்தக் கால்வாய் வழியாக நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments