திப்ரூகர் நோக்கிப் புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் இயந்திரக் கோளாறு..!
மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணை அமைச்சர் ராமேஸ்வர் தெலி மற்றும் இரண்டு பாஜக எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோருடன் அஸ்ஸாம் மாநிலம் திப்ரூகர் நோக்கி புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதையடுத்து கவுஹாத்தி விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
அமைச்சர் உள்ளிட்ட அனைத்துப் பயணிகளும் பத்திரமாக இறக்கி விடப்பட்டனர்.15 நிமிடங்கள் மட்டுமே விமானம் வானத்தில் பறந்த நிலையில், பழுது கண்டறியப்பட்டு விமானம் தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Comments