ரயில் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த யாரும் பாதிக்கப்படவில்லை - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

0 2435

ரயில் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ஒடிசா மருத்துவமனைகளில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் சிகிச்சையில் இல்லை என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ரயில் விபத்து மீட்புப்பணியை ஆய்வு செய்ய ஒடிசா சென்ற அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் ஆகியோர் சென்னை திரும்பினர். இதையடுத்து விமான நிலையத்தில் பேட்டியளித்த உதயநிதி, தமிழக அதிகாரிகள் குழு ஒடிசாவிலேயே தங்கியிருப்பதாகவும், கோரமண்டல் ரயிலில் பயணித்த தமிழர்களை தொடர்பு கொண்டு அவர்களது பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதாகவும் கூறினார்.

இதனிடையே, ஒடிசாவில் இருந்து திரும்பிய அமைச்சர்கள் இருவரும், பாலாசோரில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணிகள் குறித்தும், பயணிகள் ரயில் மூலம் சென்னை திரும்ப மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விளக்கமளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments