சரக்கு ரயிலில் இரும்பு தாதுக்கள் ஏற்றப்பட்டிருந்ததால், கோரமண்டல் ரயிலுக்கு பெரும் பாதிப்பு - ரயில்வே வாரியம் விளக்கம்
சரக்கு ரயிலில் இரும்பு தாதுக்கள் ஏற்றப்பட்டிருந்ததால், அதன் மீது மோதிய கோரமண்டல் ரயிலுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டதாகவும், அதிக உயிரிழப்புகள், அதிகமானோர் காயமடைந்ததற்கும் இதுவே காரணமாக அமைந்ததாகவும் ரயில்வே வாரியம் விளக்கமளித்துள்ளது.
இது குறித்து பேட்டியளித்த ரயில்வே வாரிய உறுப்பினர் ஜெயா வர்ம சின்ஹா, 'க்ரீன்' சிக்னல் கிடைத்த பின்னரே ரயிலை முன்னோக்கி இயக்கியதாக கோரமண்டல் ரயில் ஓட்டுநர் தெரிவித்ததாக கூறினார்.
மேலும், ஓட்டுநர் சிக்னல் விதிமீறலில் ஈடுபடவில்லை என்றும், அவர் ரயிலை அனுமதிக்கப்பட்ட வேகத்திலேயே இயக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.இதனிடையே, ரயில் விபத்தில் 275 பேர் பலியானதாகவும், சில சடலங்கள் இருமுறை எண்ணப்பட்டதால் 288 பேர் பலியானதாக முதலில் அறிவிக்கப்பட்டதாகவும் ஒடிசா அரசு விளக்கமளித்துள்ளது. அனைத்து உடல்களுக்கும் மாநில தடய அறிவியல் ஆய்வகம் டிஎன்ஏ சோதனை நடத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments