ஜப்பானில் 3 நாட்களாக பெய்துவரும் கனமழை.. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சாலைகள்
ஜப்பானில் 3 நாட்களாக பெய்துவரும் கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வெப்பமண்டல புயலான மார்வார், நாட்டின் முக்கிய தீவான ஹொன்ஷூவில் கரையை கடந்த நிலையில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன்காரணமாக கிழக்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களில் சுமார் 7 ஆயிரம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
மத்திய ஜப்பானில் சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதுடன், வாகனங்களும் வெள்ள நீரில் இழுத்துச் செல்லப்பட்டன. இதனிடையே, நாட்டின் மேற்கு பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Comments