பூமியின் மேற்பரப்பில் இருந்து 32,808 அடி வரை ஆழமாக துளையிடும் சீனா..!

0 3918

கனிம வளங்கள் மற்றும் நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு உள்ளிட்டவை குறித்து அறிய 32 ஆயிரத்து 808 அடி ஆழத்துக்கு பூமி யைத் துளையிடும் பணியை சீனா துவக்கியுள்ளது.

நாட்டின் எண்ணெய் வளம் மிக்க ஜின்ஜியாங் மாகாணத்தில் அமைந்துள்ள தாரிம் படுகையில் இதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளது. பூமிக்கு மேற்பரப்பில் துளையிடும் பணிகள், 10-க்கும் மேற்பட்ட பாறை அடுக்குகளை ஊடுருவிச் சென்று, பூமியின் மேலோட்டத்தில் உள்ள 145 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய கிரெட்டேசியஸ் அமைப்பை அடையும்.

தாரிம் படுகையில் உள்ள கடுமையான நிலச் சூழல் மற்றும் சிக்கலான நிலத்தடி நிலை மை காரணமாக பூமியின் மேலோட்டத்தில் ஆழமான துளை துளையிடுவது அவ்வளவு எளிதானது அல்ல.

பூமியில் 20 வருட துளையிடலுக்குப் பிறகு மனிதனால் உருவாக்கப்பட்ட ஆழமான துளை, ரஷ்யாவில் உள்ள 12 ஆயிரத்து 262 மீட்டர் கோலா சூப்பர் டீப் போர்ஹோல் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments