பல ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்து கோணலூர் ஏரிக்கு வலசை வந்த அரியவகை பறவைகள்..
திருவண்ணாமலை மாவட்டம் ஆவூர் அருகே உள்ள ஏரியில் ஏராளமான வெளிநாட்டுப் பறவைகள் வந்து தஞ்சமடைந்துள்ளன.
கோணலூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ள இந்த ஏரிக்கு குருட்டு கொக்கு, உன்னி கொக்கு, வெள்ளை கொக்கு போன்ற உள்நாட்டு பறவைகளும் நத்தைக்குத்தி நாரை, சாம்பல் நாரை, கூழைக் கிடா, கரண்டிவாயன் உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகளும் வந்துள்ளன.
இந்தப் பறவைகளை சுற்றுவட்டாரங்களில் இருந்து வந்து மக்கள் பார்த்து ரசித்துச் செல்கின்றனர். கோணலூருக்கு ஆண்டுதோறும் வெளிமாநில மற்றும் வெளிநாட்டுப் பறவைகள் வலசை வந்து செல்வது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments