மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்தை உணர்வுப்பூர்வமாக கையாள்கிறோம்: அனுராக் தாகூர்

0 1659

மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்தை மத்திய அரசு உணர்வூப்பூர்வமாக கையாண்டு வருவதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும், டெல்லி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தவுடன் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும்  தெரிவித்தார்.

சட்டம் அனைவருக்கும் சமம் எனக்கூறிய அவர், அனைத்து வீரர், வீராங்கனைகளும் தங்களுக்கு முக்கியம் என தெரிவித்தார்.

ஜூன் 1-ல் மல்யுத்த வீராங்கனைக்ளுக்கு ஆதரவாக சம்யுக்த் கிசான் மோர்சா (Samyukt Kisan Morcha) நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த நிலையில், டெல்லிக்கு வெளிமாநிலங்களில் இருந்து நுழையும் எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments