ராணுவ விமானத்திற்கான எஞ்சினை இந்தியாவிலேயே தயாரிக்க அமெரிக்க அரசு ஒப்புதல் அளிக்க உள்ளதாக தகவல்..!
இந்திய ராணுவ விமானத்திற்கான எஞ்சினை இந்தியாவிலேயே தயாரிக்க ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்திற்கு அமெரிக்க அரசு ஒப்புதல் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அரசு முறைப்பயணமாக வரும் 22ஆம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்ல உள்ளார். இந்த பயணத்தின்போது ஜெட் எஞ்சின்களின் தயாரிப்பை இறுதி செய்யும் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
போர் விமானங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இந்தியா, அதற்கான எஞ்சின்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் வகையில் தொழில்நுட்பங்களை பகிர ஆர்வமாக உள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே இந்தாண்டு தொடக்கத்தில், ராணுவ தளவாட உற்பத்தி மற்றும் தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்வது தொடர்பாக விரிவான கூட்டுறவை மேம்படுத்துவத இந்தியாவும் அமெரிக்காவும் ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
Comments