கடன் உச்சவரம்பு உயர்வு மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம்

0 2361

கடன் உச்ச வரம்பை உயர்த்தும் மசோதா தொடர்பாக அதிபர் ஜோ பைடன் மற்றும் சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி இடையே உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து இந்த மசோதா செனட் சபையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதன்மூலம் அமெரிக்க அரசு நிர்வாகத்துக்கு ஏற்பட இருந்த நிதி நெருக்கடி தவிர்க்கப்பட்டுள்ளது.

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இருதரப்பிலும் பெரும்பாலான உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவு அளித்தனர்.குடியரசுக் கட்சியினருடன் சேர்ந்து 52 ஜனநாயகக் கட்சியினரும் ஆதரவாக வாக்களித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments