இந்தியா - சீனா எல்லைப் பிரச்சினையைத் தீர்க்க விரைவில் பேச்சுவார்த்தை நடைபெறும் - வெளியுறவு அமைச்சக அதிகாரிகள்

0 1682

இந்தியா சீனா ராணுவத் தளபதிகள் மட்டத்திலான அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எல்லை விவகாரங்கள் தொடர்பான இருதரப்பு செயல்திட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா சீனா இடையிலான அசல் எல்லைக் கோடு பிரச்சினைக்குத் தீர்வு காண விரைவில் ராணுவத்தளபதிகள் பேச்சுவார்த்தையை நடத்துவது என முடிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திறந்த மனத்துடன் பிரச்சினைகளைஅணுக சீன அதிகாரிகள் ஒப்புதல் அளித்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments