ஜப்பான் நிறுவனங்களுடன் ரூ.3,233 கோடி மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து - முதலமைச்சர்
ஜப்பான் நிறுவனங்களுடன் மொத்தம் 3,233 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டிருப்பதாகவும் . இதன் மூலமாக, நேரடியாகவும் மறைமுகமாகவும் 5000-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் சுற்று பயணங்களை முடித்து விட்டு நேற்று இரவு சென்னை திரும்பிய முதலமைச்சர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது ஆசியாவின் மிகப்பெரும் உற்பத்தி தொழில் மையமாக தமிழ்நாடு உருவெடுக்க வேண்டும் என்பது தான் அரசினுடைய குறிக்கோள் என்றார்.,
முன்னதாக விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்றனர்.
Comments