இன்று விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி- எஃப்-12 ராக்கெட்..!

0 1865

தரை, கடல், வான்வழி போக்குவரத்தை கண்காணிப்பதற்கான என்.வி.எஸ்-01 என்ற வழிகாட்டு செயற்கைக்கோளை சுமந்தபடி இஸ்ரோவின் 'ஜி.எஸ்.எல்.வி. எஃப்-12' ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது.

இதற்கான 27½ மணி நேர கவுண்டவுன் நேற்று தொடங்கியது. ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள ஏவுதளத்தில் இருந்து, ஜி.எஸ்.எல்.வி. எப்-12 ராக்கெட் இன்று காலை 10.42 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.

மூன்று நிலைகளைக் கொண்ட இந்த ராக்கெட்டில் எரிபொருட்கள் நிரப்பப்பட்டு, ஏவுதளத்தில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளது. ராக்கெட் மற்றும் செயற்கைக் கோளின் செயல்பாடுகளை கட்டுப்பாட்டு அறையில் இருந்து, இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments